மத பிரசாரத்துக்கு கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம்

Published:

nagarkoil-christian-women-college-studentsசென்னை: மதப்பிரசாரத்துக்கு நாகர்கோவில் கிறிஸ்துவக் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரம்: நாகர்கோயில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் (Women’s Christian College – WCC) கிறிஸ்தவ மத பிரசாரத்திற்காக கல்லூரிப் பெண்களை பயன்படுத்தும் மதவெறிச் செயல் நடந்துள்ளது. கல்லூரி அமைந்துள்ள சாலையில் ( WCC ROAD) தினம் ஒரு துறையைச் (department) சார்ந்த மாணவிகள் கட்டாயம் கிறிஸ்தவ மத சம்பந்தமான நோட்டீஸ் விநியோகிக்க வேண்டும். இதற்காக கல்லூரி முடிவதற்கு அரைமணி முன்னதாகவே மாணவிகள் வெளியில் சாலைக்கு அனுப்பப்படுகிறார்கள். கிறிஸ்தவ மதத்தைச் சாராத அனைத்துப் பெண்களுமே இந்த நோட்டீஸ் விநியோகத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்பது கல்லூரி நிர்வாகத்தின் கட்டளை.எனவே கிறிஸ்தவ மதம் சாராத மற்ற பெண்களும் நிர்பந்தம் காரணமாக இந்த செயலில் ஈடுபட வேண்டி இருக்கிறது. கல்லூரியில் ஒரு மதத்தைச் பரப்ப வேலை செய்வது என்பது நாட்டின் கல்விக் கொள்கைகளுக்கு எதிரானது. இம்மதப் பிரசாரம் மதமாற்றத்திற்கே வழிகோலுகிறது. மேலும் கல்வி பயில வந்த மாணவிகளிடம் இச் செயல்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவது மனித உரிமைகளை மீறும் செயலாகும், எனவே இதை தடுத்திடக் கோரி காவல் துறையில் புகார் கொடுத்தபோதும் அவர்கள் நேரில் வந்து பார்த்துவிட்டு நோட்டீஸ் விநியோகிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக நின்று வேடிக்கை பார்த்து சென்றுவிட்டனர். பட்டப்பகலில், நட்ட நடு ரோட்டில் இத்தகைய மதப் பிரசாரத்தில் ஈடுபடும் கல்வி நிறுவனத்தின் பேரில் நடவடிக்கை எடுத்து, அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்யவேண்டும். மேலும் மதமாற்ற செயலுக்கு மாணவிகளை அனுப்பிய கல்லூரி நிர்வாகிகள் மற்றும் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும், என இந்துமுன்னணி இந்து மக்கள் சார்பிலே கேட்டுக்கொள்கிறது.

Related articles

Recent articles

spot_img