புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையில் தரிசிக்க திருமலை  எங்கும் பக்தர்கள்!

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

FB IMG 1665122728573 - 2026
FB IMG 1665122743343 1 - 2026

புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டித் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது பக்தர்களின் கருத்தாகும். அதுவும் திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருமலையில் புரட்டாசி நவராத்திரியை ஒட்டி பிரம்மோற்சவமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்ள். இதை ஒட்டிக் கடந்த வாரம் திருமலையில் ஒரு நாளைக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நவராத்திரி முடிவடைந்த நிலையில் அக்டோபர் 4 மற்றும் 5 ம் தேதிகளில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்துக்குள்ளாகவே இருந்தது.

இந்நிலையில் நாளை (8.10.22) புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை வருவதையொட்டி பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் திருமலையை நோக்கி  தொடங்கினர்.
அக்டோபர் 5 ம் தேதி மாலை முதல் அதிகரிக்கத் தொடங்கி பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அளவில் இருந்தது. தற்போது தரிசனத்துக்கான பக்தர்களின் வரிசை சுமார் 5 கி.மீ நிற்கிறது. மேலும் தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகலாம் என்கிறார்கள்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

நாராயண கிரி கார்டனில் இருக்கும் அனைத்து ஷெட்களும் பக்தர்களால் நிரம்பிய நிலையில் வரிசை வெளியே தொடங்கி நேற்று காலையிலேயே சிலா தோரணம் வரை நீண்டது. பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவந்தாலும் அதிகரிக்கும் கூட்டம் இன்னும் நிலைமையைச் சிக்கலாக்கும் என்கிறார்கள்.

FB IMG 1665122759353 - 2026

Related articles

Recent articles

spot_img