தேவர் தங்கக் கவசத்தை ராமநாதபுரம் டி.ஆர்.ஓ. எடுத்துச் சென்று அணிவிக்க நீதிமன்றம் உத்தரவு

Published:

devar 1 - 2026

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் தங்கக் கவசத்தை தங்களிடம் வழங்கவேண்டும் என்ற இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் வழங்கிய தங்கக் கவசத்தை ராமநாதபுரம் டி.ஆர்.ஓ. வங்கியில் இருந்து எடுத்துச் சென்று அணிவிக்க வேண்டும். மேலும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட பின் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கவும் ராமநாதபுரம் டி.ஆர்.ஓ.வுக்கு அதிகாரம் வழங்கி  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி, தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து கவசத்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கக் கவசத்திற்கு ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும். இந்த ஆண்டுக்கு மட்டுமே உத்தரவு வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img