மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி உள்ளூர் மக்கள் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நீமுச் பகுதியை சேர்ந்தவர் விஜய் சிங். இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்த இவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். இதன்பின்னர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அவரது வருகையை உள்ளூர் மக்கள் வித்தியாசமுடன் வரவேற்றது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
அந்த பகுதி மக்கள் தங்களது உள்ளங்கைகளை நீட்டி ராணுவ வீரரின் கால்களை தாங்கி வரவேற்றனர். அதன் மீது நடந்து செல்லும்படி அவரை கூறினர். அவருக்கு பூக்கள் தூவி, மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
பொதுமக்களின் இச்செயலால் உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஜய் சிங், கடந்த 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் நான் சேவையாற்றி வந்துள்ளேன். மக்கள் எனக்கு அளித்த இந்த வரவேற்பு எனக்கு அதிக பெருமை அளிக்கும் தருணம் ஆகும். தாழ்மையுடன் நான் இதனை ஏற்று கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Madhya Pradesh: Locals in Neemuch welcome soldier who returned home after retirement, by laying out their palms for him to walk on
— ANI (@ANI) February 4, 2021
"I've served in the army for 17 years. Today is a very proud moment for me by the gesture shown by the people. I'm humbled," says Naik Vijay B Singh pic.twitter.com/TsjFU0M6vU