‘காசி தமிழ் சங்கமம்’ ராம சேது போல இருக்கும் என்று, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் டிவீட் செய்துள்ளார்.
அவரது ட்வீட் பதிவு:
காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்.
‘காசி தமிழ் சங்கமம்’ ஆனது இந்த ‘ஒன்றுபட்ட நிலை’யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம்.
அன்பென்ற உணர்வு இழைகளினால் இந்தியா முழுவதையும் பிணைத்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு.
பாபா விஸ்வநாதரின் புண்ணிய ஸ்தலத்தில் ‘காசி-தமிழ் சங்கமம்’ விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும்/பிரமுகர்களுக்கும் அன்பான வரவேற்பு. இந்த விழா மரியாதைக்குரிய பிரதமரின் ‘ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்’ உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும்.
இந்த நிகழ்வு இந்தியாவின் கலாச்சார நாகரிகத்தில் ‘ராம சேது’ போலவே இருக்கும்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்குச் செல்லும் மாணவர்களை பாஜக., தமிழக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உற்சாகப் படுத்தி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.
தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர். மாணவர்களிடம் ஆளுநர் கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார்.