November 7, 2024, 2:01 AM
25.5 C
Chennai

சபரிமலை ஐயப்பனுக்கு இன்று மாலை மகரவிளக்கு பூஜை..

சபரிமலையில் ஐயப்பனுக்கு இன்னும் சிலமணி நேரத்தில் தங்கதிருபாவரணங்கள் அணிவித்து மகரவிளக்கு பூஜை இன்று மாலை நடைபெற உள்ளநிலையில் காடு‌மலை நதி கடந்து திருபாவரணப்பெட்டி கோஷயாத்திரை சபரிமலையை நெருங்கியது.இன்று மாலை தெரியும் மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. ஐய்யப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. ஜோதி தரிசனம் இதனையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு அய்யப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது.

அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா… என்ற கோஷம் எழுப்புவர். இந்த ஆண்டு மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியில் குவிந்துள்ளனர். இதற்காக ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஏற்கனவே தங்கியுள்ளனர். மேலும் ஏற்கனவே மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலைக்கு வருவதற்கு முன்பதிவு செய்தவர்களும் இன்று குவிய உள்ளனர்.

ALSO READ:  IND Vs BAN Test: டிரா ஆக வேண்டிய மேட்சுக்கு உயிர் கொடுத்த ரோஹித்!

எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ரூ.310 கோடி வருமானம் இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தில் நேற்று வரை 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த காலங்களில் சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது. “நடப்பு சீசனையொட்டி சபரிமலையில் 12-ந் தேதி (நேற்று) வரை ரூ.310.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலமாக மட்டும் ரூ.140.75 கோடி வசூலாகி உள்ளது.” என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் கூறினார்.

கடந்த வருடம் 61 நாட்களில் சபரிமலையில் 19.39 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.151 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் பக்தர்கள் வருகை யும், வருமானமும் இருமடங்காக அதிகமாகி உள்ளது.

ALSO READ:  பாலக்காடு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து... பயணிகள் ரயிலுக்கு ‘வேட்டு’!
author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week