
கடந்த இருநாட்களாக இந்தியாவில் மணிப்பூர் தெலுங்கானா வில் நிலநடுக்கம் ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இன்று துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 90பேருக்கும் மேல் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்தி குறிப்பு கூறுகிறது இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் நாடுகளிலிலும் உணரப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
அதேவேளை, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா?சேதம் திப்பு என்பது குறித்த விபரங்களை துருக்கி அரசு மேற்கொண்டு வருகிறது. துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.
இது குறித்து துருக்கி செய்தி சேனல்கள்துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை அமைப்புகள் மீட்பு பணி சேதமதிப்பீடுகளை வெளியிட்டு வருகின்றன. மத்திய துருக்கி பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,இது ரிக்டர் அளவுகோளில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கின.
நிலநடுக்கத்தின் தாக்கம் மத்திய கிழக்கு துருக்கியின் சில மாகணங்களிலும் இருந்தது.துருக்கியின் காஜியண்டெப் பகுதியில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் தரவுகள் தெரிவிக்கின்றன.
துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை அமைப்பு, கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரத்தில் மையம் கொண்டு 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
துருக்கி நிலநடுக்கத்தில் 90பேருக்கும் மேல் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்தி குறிப்பு கூறுகிறது.பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.