தமிழகத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்கள் 4ஏடிஎம்மில் கொள்ளை ..

images 87 - 2026

அண்மையில் சென்னையில் நகைக்கடையில் நடந்த மாபெரும் நகைகொள்ளை சம்பவம் நடந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.86 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் பகுதியில் தேனிமலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாரியம்மன் கோவில் தெரு ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்தனர். பின்னர் அதில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து தேனிமலை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற கொள்ளை கும்பல் இதே பாணியில் அங்கும் கைவரிசை காட்டியது. கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.30 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்தனர். இதன் பின்னர் கொள்ளை கும்பல் வேலூர் நோக்கி பயணத்தை தொடர்ந்தது. திருவண்ணாமலையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள கலசப்பாக்கத்துக்கு கொள்ளையர்கள் சென்றனர். கலசப்பாக்கம் மெயின் ரோட்டில் ‘இண்டியா ஒண்’ வங்கி ஏ.டி.எம். மையத்தில் புகுந்த கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தை சுருட்டினர்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

இதன்பிறகு போளூர் சென்ற கொள்ளையர்கள் அங்கு மீண்டும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்தனர். அதிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. போளூர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. மொத்தம் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்த கொள்ளையர்கள் சுமார் ரூ.86லட்சம் பணத்தை மிகவும் துணிச்சலாக கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.கொள்ளைபோன பணத்தின் சரியான மொத்த மதிப்பு கணக்கீடு செய்தபின் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாள் இரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையர்கள் சாவகாசமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் மர்ம கொள்ளை கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளது.

கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக கொள்ளையர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் தான் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை உடனடியாக கூண்டோடு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகிய இருவரின் மேற்பார்வையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை சல்லடை போட்டு தேடி வருகிறார்கள். கொள்ளைபோன 4 ஏ.டி.எம்.களில் 3 ஏ.டி.எம்.கள் ‘ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா’ வங்கிக்கு சொந்தமானவையாகும். ஒருவங்கி கிராமப்பகுதிகளில் அதிகமாக உள்ள ‘இண்டியா ஒன்’ ஏ.டி.எம். ஆகும். இந்த 4 ஏ.டி.எம். மையங்களிலும் காவலாளிகள் இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது. ஏ.டி.எம். மையங்களில் உள்ள கேமரா மற்றும் கேமரா காட்சிகள் பதிவாகும் ஐ.வி.ஆர். பெட்டி ஆகியவற்றை கொள்ளையர்கள் சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் ஐ.வி.ஆர். பதிவான பெட்டியை தீவைத்து எரித்து தடயங்களை அழித்துள்ளனர். இதனால் கொள்ளையர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை கூட போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னை பெரம்பூரில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் நகைக்கடையை உடைத்து 9 கிலோ தங்கநகைகள் வைரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கியாஸ் வெல்டிங் மூலமாக நகை கடையின் இரும்பு ஷட்டரை சத்தமில்லாமல் உடைத்த கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக கை வரிசை காட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

வடசென்னை கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் கொள்ளை சம்பவத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலேயே உள்ளது. இதனால் வடசென்னை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடந்துள்ளது.தொடர் கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories