பெங்களூரு-14-வது சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் துவக்கிவைத்தார்..

Published:

500x300 1835276 modi - 2026

பெங்களூருவில் 14-வது சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து விமானப்படை வீரர்களின் சாகசத்தை பிரதமர் ரசித்து பார்த்தார்

image 38 - 2026

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதில் விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமான விமானங்கள் வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தின. விமானப்படை வீரர்களும் பல்வேறு சாகசங்களையும் செய்து காட்டினார்கள்.

image 36 - 2026

இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த சாகச நிகழ்ச்சி மெய்சிலிக்கும் வகையில் அமைந்தது. இந்த சாகசத்தை பிரதமர் நரேந்திரமோடி வெகுவாக ரசித்து பார்த்தார். காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணிவரை விமானங்களில் சாகசங்கள் நடைபெறுகிறது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
image 39 - 2026

பெங்களூருவில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி மற்றும் சாகசம் கடந்த முறை நடந்த விமான கண்காட்சியின் மூலமாக பல லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. அது போல் எச்ஏஎல் தயாரித்த இலகு ரக ஹெலிகாப்டர், தேஜஸ் உள்ளிட்ட விமானங்களின் சாகசத்தை பல லட்சம் பேர் கண்டு களித்தனர்.

இந்த கண்காட்சியில் ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான இதில் பெல், பிஇஎம்எல், எச்.ஏ.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் புதிய கண்டு பிடிப்புகள், கனரக மற்றும் ராணுவ தளவாடங்களும் இடம் பெற்றுள்ளன.

500x300 1835236 show1 - 2026

இந்த கண்காட்சியில் இந்திய போர் விமானங்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த அதி நவீன போர் விமானங்களும் பங்கேற்று வானில் சாகசங்களில் ஈடுபடுகின்றன.

வருகிற 17ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் . இந்த விமான கண்காட்சியில் ரூ.75,000 கோடி மதிப்பிலான 251 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நிறைவடைந்ததும் எலங்காவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
1500x900 1143028 modi - 2026

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கண்காட்சிக்கு வந்தவர்களை பலத்த சோதனைக்கு பிறகே பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img