டெல்லியில் பாஜக விவசாய அணி நிர்வாகி சுட்டுக்கொலை..

Published:

1865930 bjp - 2026
#image_title

டெல்லியில் பாஜக விவசாய அணி நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாஜக‌ சுரேந்திராவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டெல்லி பாஜக விவசாய அணி நிர்வாகி சுரேந்திர மதிலா (60). இவர் நேற்று மாலை பிண்டாபூர் நகரில் அவரது அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 2 பேர் அலுவலகத்தில் இருந்த சுரேந்திர மதிலாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த சுரேந்திர மதிலா அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சுரேந்திராவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img