தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

TASMAC - 2026

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்! வாக்குப்பதிவு வரை உள்ள 48 மணி நேரத்திற்கு மதுபானக்கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்றும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபான கடைகள் திறந்து இருக்கக் கூடாது என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது

இந்நிலையில் தமிழகத்தில் வரும் 16 17 மற்றும் வாக்குப்பதிவு நாளன்று 18 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.