விருதுநகர் அரசு மருத்துவமனையில்கைதிகளை வெட்டிய கூலிப்படையினர் இருவர் கைது..

Published:

IMG 20230421 WA0082 - 2026
#image_title

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதிகளை வெட்டிய வழக்கில் மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திண்டுக்கல் வெள்ளைப் பூண்டு வியாபாரி சின்னத்தம்பி கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக,
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகளை வெட்டிய வழக்கில்

மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த சரவணன்(29),தங்கமலை(27) ஆகிய கூலிப்படையைச் சேர்ந்த இருவரை விருதுநகர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

IMG 20230421 WA0083 - 2026
#image_title

திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் வெள்ளைப் பூண்டு வியாபாரி சின்னத்தம்பி கடந்த மாதம் 2-ம் தேதி சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ், விக்னேஷ் இருவரும் விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.
இவர்களை கொலை செய்யும் நோக்கில் செவ்வாயன்று இரவு 6 பேர் கொண்ட கும்பல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கைதிகளை வெட்டினர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிலம்பரசன் மற்றும் அழகுராஜா இருவரையும் காப்பாற்றினர்.
இது குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு
கைதிகளை வெட்டியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கினர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

இந்நிலையில் மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் சரவணன்(29),தங்கமலை(27) ஆகிய இருவரை விருதுநகர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img