கா்நாடக காங்கிரஸ் 114 தொகுதிகளில் முன்னிலை..

Published:

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 114 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. 

224 தொகுதிகளுக்கான கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் மே 10-ஆம் தேதி(புதன்கிழமை) நடந்து முடிந்தது. ஆளுங்கட்சியான பாஜக, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய இத்தோ்தலில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

IMG 20230510 WA0051 2 - 2026
#image_title

இந்நிலையில் கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் உள்ள 36 மையங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலை 9.15 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 114, பாஜக-92, மஜத -17, பிற கட்சிகள்- 1 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. 

பெரும்பான்மையைப் பெற, ஆட்சியைப் பிடிக்க 113 இடங்களில் வெற்றி தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img