வைகாசி மாத பூஜைக்கு சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் வைகாசி இடவ மாச பூஜைக்காக அய்யனின் நடை இன்று (14/05/2023) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். நாளை 15ஆம் தேதி முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது
19ம் தேதி வரை கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும் தினமும் படிபூஜைகள் நடக்கிறது. தினமும் உதயாஸ்தமய பூஜை, படிபூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், புஷ்பாபிஷேகம் ஆகியவை சிறப்பாக நடைபெறும்.19ம் தேதி இரவு 10 மணிக்கு மூடப்படும்.
திருவனந்தபுரம், செங்கனூர், பத்தனம்திட்டா, எருமேலி மற்றும் குமளியில் இருந்து பம்பைக்கு கேஎஸ்ஆர்டிசி சிறப்பு சேவைகளை இயக்குகிறது.
நிலக்கல்- பம்பை வழித்தடத்தில் சங்கிலி சேவையும் உள்ளது. பம்பை வரை சிறிய வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் பார்க்கிங் அனுமதிக்கப்படவில்லை. நிலக்கல்லில் மட்டும் பார்க்கிங் வசதி உள்ளது.