மத்திய பட்ஜெட்டில் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 4.4 லட்சம் கோடி குறைப்பு: வைகோ கண்டனம்

Vaiko சென்னை: மத்திய பட்ஜெட்டில் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 4.4 லட்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளதாக மதிமுக., பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 60 விழுக்காடு சரிந்துவிட்ட நிலையில், மத்திய அரசு கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3.70 ரூபாயும் உயர்த்தி இருக்கிறது. பா.ஜ.க. அரசின் சாதனையாக பணவீக்க விகிதம் 5 விழுக்காடு அளவுதான் என்று நிதி அமைச்சர் கூறினார். ஆனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியும், சேவை வரி 12.36 விழுக்காடு என்பதை 14 விழுக்காடு என்று அதிகரித்தும், பட்ஜெட்டுக்குப் பிறகு விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த, சாதாரண ஏழை, எளிய மக்களைப் பற்றிக் கவலைப்படாத மத்திய அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மோடி அரசின் முழுமையான நிதிநிலை அறிக்கையை ஆராய்ந்தால், கடந்த ஆட்சியின் போது சமூக நலத்திட்டங்களுக்கும், விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கடந்த 2014-15 நிதி ஆண்டில் வேளாண்துறைக்கு 19,852 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது 17,004 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான நிதி 12,107 கோடி ரூபாயிலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டு, 6,244 கோடி ரூபாய் ஆகியிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பட்ஜெட்டில் நீர் ஆதாரத் திட்டங்களுக்கு 6,009 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. இதில் தற்போது சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. நில மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 3,759 கோடி ரூபாயிலிருந்து 1,637 கோடி ரூபாய் என்று குறைந்துவிட்டது. மேலும் பல சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்களுக்கு 2014-15 இல் 18,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு இருந்தது. ஆனால், தற்போது 10,400 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் நலன் துணைத் திட்டங்களுக்கான நிதி 13 ஆயிரம் கோடி ரூபாயும், பழங்குடியினர் நலன் துணைத் திட்டங்களுக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது மதிய உணவுத் திட்டத்துக்கு 11,770 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கான ஒதுக்கீடு 68 ஆயிரத்து 968 கோடி ரூபாய் நிதி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே ஆகும். காங்கிரஸ் கூட்டணி அரசு, சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியிலிருந்து சுமார் 4.4 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைத்துள்ள பா.ஜ.க. அரசு, பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகையை மட்டும் 5.49 இலட்சம் கோடி ரூபாயிலிருந்து 5.89 இலட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. இதன் மூலம் மோடி அரசு பெரு நிறுவனங்களால், பெரு நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாளித்துவ அரசு என்பதை இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories