திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

annamalai stalin edappadi
அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

அதன்படி இன்று திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக முதல் கட்ட பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளது. திமுக தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதிமுக., கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். தேமுதிக., 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக., குறித்த பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.

திமுக., வேட்பாளர்கள் பட்டியல்

மக்களவைத் தேர்தலுக்கான 21 தொகுதிகளுக்கான தி.மு.க., வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் கட்சியாக திமுக., கூட்டணித் தொகுதி பங்கீட்டை முடித்து முன்னதாகவே அறிவித்தது. அதன்படி, திமுக., 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னதாகவே விருப்ப மனு பெற்று நேர்காணல் நடத்தி, வேட்பாளர்களை இறுதி செய்தது திமுக.,! கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும் இரு கம்யூனிஸ்ட்களு தலா இரு தொகுதிகளும், மதிமுக., முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

இந்நிலையில் இன்று, திமுக., போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலுடன், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.

அதன்படி, திமுக., சார்பில் போட்டியிடுபவர்கள்…

வட சென்னை- கலாநிதி வீராசாமி
தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன்
மத்திய சென்னை- தயாநிதி
ஸ்ரீபெரும்புதுார் – டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் (தனி) – க.செல்வம்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
வேலுார்- கதிர்ஆனந்த்
தர்மபுரி – ஆ.மணி
திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
ஆரணி- எம்.எஸ்.தரணிவேந்தன்
கள்ளக்குறிச்சி – கே.மலையரசன்
சேலம் – செல்வகணபதி
ஈரோடு – பிரகாஷ்
நீலகிரி (தனி) – ஆ.ராசா
கோவை – கணபதி ப. ராஜ்குமார்
பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி
பெரம்பலுார் – அருண் நேரு
தஞ்சாவூர் – ச.முரசொலி
தேனி – தங்க தமிழ்செல்வன்
துாத்துக்குடி – கனிமொழி
தென்காசி – ராணி ஸ்ரீகுமார்

இந்தப் பட்டியலின்படி, ஏற்கெனவே எம்.பி.யாக இருப்பவர்கள் 10 பேர். புதியவர்கள் 11 பேர்.

இவர்களில் பெண்கள் 3 பேர், பட்டதாரிகள் 19 பேர், மருத்துவர்கள் 2 பேர், வழக்கறிஞர்கள் 6 பேர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

அதிமுக., வேட்பாளர் பட்டியல்

அதிமுக., தரப்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதன்படி, அதிமுக., சார்பில் போட்டிடுபவர்கள்…

சென்னை வடக்கு – ராயபுரம் மனோ
சென்னை தெற்கு – ஜெயவர்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – ஏ.எஸ்.விஜயன்
கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
விழுப்புரம் – பாக்யராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – தமிழ்மணி
ஈரோடு – அசோக்குமார்
சிதம்பரம் – சந்திரஹாசன்
நாகப்பட்டினம் – சுர்ஜித் சங்கர்
கரூர் – தங்கவேல்
மதுரை – டாக்டர் சரவணன்
தேனி – நாராயணசாமி
ராமநாதபுரம் – ஜெயபெருமாள்
ஆரணி – கஜேந்திரன்

என்ன செய்யப் போகிறது பாஜக.,

தமிழகத்தில் பாஜக., கூட்டணியில், பாமக., தமாகா., அமமுக., புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன. இவர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவும் இணைந்தது.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

பாஜக., கூட்டணியில், பாமக.,வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு செய்வதற்காக, சென்னை கமலாலயத்தில், பாஜக, முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடந்தது.

இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அமமுக., மற்றும் பன்னீர்செல்வத்தின் உரிமை மீட்புக் குழுவிற்கான தொகுதிப் பங்கீடு இன்று நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories