காவிரி பிரச்னையில் தில்லியில் நடத்தும் அனைத்துக் கட்சி போராட்டங்களில் பாமக பங்கேற்கும்; ராமதாஸ்

சென்னை:
காவிரி பிரச்னையில் மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு மாநில அரசு துரோகம் இழைக்கிறது என்றும், அனைத்துக் கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் பாமகவும் பங்கேற்கும் என்றும் பாமக., நிறுவுனர் ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இச்சிக்கலில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழகஅரசு, மவுனமாகியிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை கணக்கில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். அதனால் தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதுமே காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் அடுக்கக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றும், அதன் தொடர்ச்சியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் தில்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் பா.ம.க. யோசனை தெரிவித்தது. அதன்படியே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய தமிழக அரசு, அதன்பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளில் உறுதியாக இல்லாமல் விலகிச் செல்கிறது.

காவிரிப் பிரச்சினையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்களை பிரதமரிடம் சந்திக்க தமிழக அரசின் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகக் குழுவை சந்திக்க பிரதமர் தயாராக இல்லை என்ற தகவல் மத்திய அரசிலிருந்து தெரிவிக்கப்பட்ட பின், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், பினாமி முதலமைச்சரோ எதிர்க்கட்சித் தலைவரை மட்டும் அழைத்துப் பேசினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை என்றாலும் கூட, பிரதமருடனான சந்திப்புக் குறித்து திங்கட்கிழமைக்குள் சாதகமான முடிவு வரக்கூடும் என்றும், அவ்வாறு எந்த தகவலும் வரவில்லை என்றால் 8&ஆம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் அரசுத் தரப்பில் கசியவிடப்பட்டன.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

ஆனால், திங்கட்கிழமை மத்திய அரசிடமிருந்து சாதகமான தகவல்கள் எதுவும் வரவில்லை. மாறாக, காவிரிச் சிக்கல் குறித்து விவாதிக்க சம்பந்தப்பட்ட 4 மாநில தலைமைச் செயலர்களின் கூட்டத்தைக் கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தக் கூட்டத்தால் தமிழகத்திற்கு 10 பைசாவுக்குக் கூட பயன் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்துவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் மற்றொரு தந்திரம் தான் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்றாலும் கூட, பிரதமரை சந்திப்பதற்கான அழுத்தங்கள் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ தலைமைச் செயலர்கள் கூட்டத்தால் எல்லா சிக்கலும் தீர்ந்து விடும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அதையே நம்பிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலிலாவது மீண்டும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தமிழக அரசு விவாதித்திருக்க வேண்டும். ஆனால், இப்போதும் எதிர்க்கட்சித் தலைவரிடம் மட்டும் துணை முதல்வர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, தலைமைச் செயலர்கள் கூட்டத்தை மத்திய அரசு நாளை மறுநாள் கூட்டியிருப்பதால், அதற்குப் பிறகு சட்டப்பேரவையைக் கூட்டலாம் என்று துணை முதலமைச்சர் கூறியதாகவும், அதற்கு தாமும் ஒப்புக் கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார். காவிரி சிக்கலில் தமிழகத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும் விதம் கவலையும், வேதனையும் அளிக்கிறது.

ALSO READ:  ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவது முற்றிலும் பயனற்ற நடவடிக்கை. அதனால், மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் ஏற்படப் போவதில்லை. மாறாக, மத்திய அரசை அசைத்துப் பார்க்கக்கூடிய வகையில் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. ஆனால், குறைந்தபட்சமாக பேரவையைக் கூட்ட தயாராக இல்லாமல் தமிழக அரசு பின்வாங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் துணை போயிருப்பது வெட்கக்கேடானது. காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை அதிமுகவும், திமுகவும் போட்டிப்போட்டும், கூட்டணி அமைத்தும் தாரை வார்ப்பது இன்றும் தொடர்கிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுடன் பினாமி அரசும் இணைந்து கூட்டுத் துரோகம் செய்யக்கூடாது.

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 20 நாட்களாகி விட்டன. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு 14 நாட்களாகி விட்டன. உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிய இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இன்னும் சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திலும் எந்த முடிவும் ஏற்படப் போவதில்லை. அது காலந்தாழ்த்தும் நடவடிக்கை தான். இன்னும் கேட்டால் நாளை மறுநாள் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தடுத்துக் கூட்டங்கள் கூட்டப்படக் கூடும் என்று மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.ராவ் கூறியிருக்கிறார். அது முடியும் வரை தமிழக அரசு காத்திருந்தால் காவிரியில் தமிழகத்திற்குரிய கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் மத்திய அரசின் துணையுடன் கர்நாடக அரசு பறித்துச் சென்று விடும்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

காவிரி விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய இந்நேரத்தில் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த உரிமையையும் சமரசம் செய்து கொள்ளக்கூடிய அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது தான் பெரும் சாபக்கேடு ஆகும். தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும் வேளையில், மண் புழு அளவுக்கூட எதிர்ப்புத் தெரிவிக்காமல் தமிழக அரசு அடங்கிக் கிடப்பது வேதனை அளிக்கிறது. இனியாவது தமிழக அரசு உணர்வு பெற்று மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். இதற்காக தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலகுவது, அனைத்துக் கட்சித் தலைவர்கள் தில்லிக்குச் சென்று தொடர் போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட எந்த முடிவை அரசு எடுத்தாலும் அதற்கு ஒத்துழைக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories