
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பத்மஸ்ரீ வேலு ஆசான் துவங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை பறை இசைத்து திறந்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி… பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள ஆளுநர் பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டுமலையில் ஆளுநர் விருப்ப நிதியில்
பத்ம ஸ்ரீவேலு ஆசானுக்கு புதிய குடியிருப்புடன் கூடிய பாரதி பறை பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்பாட்டு மையத்தை தமிழக ஆளுநர் R.N.ரவி திறந்து வைத்து பறை இசை கருவிகளை பார்வையிட்டார்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு காவல்துறை மரியாதையும் அதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஆளுநருக்கு பத்ம ஸ்ரீ வேலு ஆசான் பறை இசைத்து வரவேற்றார். அப்போது வேலு ஆசானிடமிருந்து பறையை வாங்கிய ஆளுநர் ரவி உற்சாகத்துடன்
பறை இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் நடைபெற்ற விழாவில் பறை இசை கலைஞர்கள், மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்களான பிரபலம், கலைமாமணி மதிச்சியம் பாலா, சின்னப்பொண்ணு, செந்தில் ,ராஜலட்சுமி, அந்தோனி ஆகியிரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து பத்மஸ்ரீ வேலு வாசன் பறை இசை கலையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது அவருக்கு மட்டுமல்ல இந்த பறை இசைக்கலையுக்கே கிடைத்த விருது எனவுன் தனது உரையில் பறை இசை கலை குறித்து பெருமிதத்துடன் பேசியுள்ளார்
பறை இசை பண்பாட்டு மையத்தை திறந்து வைத்ததில் பெருமையடைகிறேன், வேலு ஆசானுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ராஜ்பவனை லோக் பவனை மாற்றியது எனக்கு பெருமை, ராஜ்பவன் என்பது அடிமை என கருதப்படுவதால் அதை மாற்றியுள்ளேன்.
பிரதமர் மோடி வருவதற்கு முன்பு அதிகாரத்தை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் மோடிஜி வந்த பின்பு பத்ம விருதுகள் மிகவும் ஏழ்மையான மக்கள் மற்றும் கலை, சம்பந்த வட்டர்களுக்கு வழங்கியிருக்கிறார் .
எடுத்துக்காட்டாக ஏழ்மையான மூதாட்டிக்கு வழங்கியிருக்கிறார். அனாதையாக உள்ள பிணத்தை எடுத்து அடக்கம் செய்யும் நபருக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளது. அது போன்று தான் இன்று பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கிடைத்துள்ளது.
பறை நம்முடைய ஒவ்வொரு அங்கமாகவும், பறை இசை தற்போது திருமண விழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ்காரர்களுக்கு நாம் அடிமைபட்டு கிடக்கும் போது கலைகளும் அடிமைப்பட்டு, கிடந்தது, பிரிட்டிஷ்காரர்கள் நமது கலையை நமக்கு விட்டு சென்றுள்ளார்கள். பறை பண்பாட்டு கழகத்திற்கு பாரதியார் பெயரை சூட்டியதற்கும், வேலு ஆசானுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் இருக்க கூடாது? பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது? உயர் கல்வி ஆராய்ச்சி மையங்களில் முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு ஆய்வுக்குட்படுத்த வேண்டும்
ஐஐடியில் கர்நாடக இசை குறித்து ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. இதேபோல் பறை இசை குறித்தும் அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி நடத்தலாம். 2047ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதமாக மாறும் திசையில் பயணித்து கொண்டிருக்கிறோம்.
சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளாகும் 2047ம் ஆண்டு பறை இசை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் நாடெங்கிலும் பறை ஓசை கேட்கப்பட வேண்டும். பறை இசைக்கு நாடெங்கிலும் கௌரவம் கிடைக்க வேண்டும். மக்கள் இயக்கமாக கொண்டு சென்றால் நாடெங்கும் பறை இசை பயணிக்கும்.
குக்கிராமத்தில் துவக்கிய பறை இசை நாடெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்மஸ்ரீ வேலு ஆசான், தமக்கு வீடு என்ற கனவை ஆளுநர் நிறைவேற்றியுள்ளதாகவும், பறை இசைக்கலையை மென்மேலும் வளர்க்க முயற்சியாக இந்த பண்பாட்டு பயிற்சி மையத்தை துவக்கியுள்ளதாகவும் இதன் மூலம் அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக பயிற்சி வழங்க உள்ளதாக தெரிவித்தார்.




