அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்: அன்புமணி

anbumani ramadoss - 2026
#image_title

அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம் பல்லிளித்து விட்டதாகவும், அரசு ஊழியர்களே விழித்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டு பாமக., தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது …

திமுக அரசு அறிவித்திருக்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சவலைக் குழந்தையாக இருக்கிறது என்றும், திமுக அரசை நம்பிய அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் அரசு ஊழியர்கள்  சங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. அரசு ஊழியர்களுக்கு இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனையை செய்து விட்டதாக திமுக அரசு பொய்யளந்த நிலையில், ஆட்சியாளர்களின் மோசடி 3 நாளில் அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2003&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியும் குரல் கொடுத்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை  வலியுறுத்தி கடந்த 6&ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தினர். கடந்த காலங்களில் இத்தகைய வேலைநிறுத்த அறிவிப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருந்த திமுக அரசு, இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருப்பதால், கடந்த 2&ஆம் தேதி அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அதற்கு அடுத்த நாள் ஜனவரி 3&ஆம்  தேதி, அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

தமிழக அரசின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, திமுக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் மோசடியானது என்பதையும், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை தவிர்ப்பதற்காகவே இந்த நாடகத்தை திமுக அரசு நடத்துவதையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். ஆனால், ஆட்சியாளர்களோ, ஒவ்வொரு அரசு ஊழியர் அமைப்பிலும் உள்ள திமுக ஆதரவு நிர்வாகிகள் மூலம் சங்க நிர்வாகிகளை கோட்டைக்கு அழைத்துச் சென்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கச் செய்ததுடன், எந்தவித ஆலோசனையும் நடத்தாமல்   6&ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாகவும் அறிவிக்கச் செய்தனர். அரசு ஊழியர்களை ஏமாற்றுவதற்கான இந்த மோசடி நாடகத்தில் திமுக அரசுக்கு தற்காலிக வெற்றி கிடைத்தது.

ஆனாலும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடி என்பதை அது அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே அரசு ஊழியர் அமைப்புகள் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன. சென்னையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதித்த தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை சவலைக் குழந்தை என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ள அச்சங்கம்,‘‘ஓய்வூதியத்திற்காக ஊதியத்தில் 10% தொகை பிடிப்பதை கைவிட வேண்டும்; இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பதைப் போல பொது வருங்கால வைப்பு நிதியாக (ஜி.பி.எஃப்) மாற்ற வேண்டும்; பொது வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெற அனுமதிக்க வேண்டும்; ஓய்வு பெறும் போது அந்த நிதியை வட்டியுடன் வழங்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட அம்சங்களை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று திமுக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அதேபோல், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமும் திமுக அரசின் ஓய்வூதியத் திட்டத்தை கடுமையாக  விமர்சித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் அறி\முகம் செய்யப்பட்ட பிறகு கடந்த 23 ஆண்டுகளில் ஒவ்வொரு பேராசிரியரிடமிருந்தும் ரூ. 1 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தத் தொகையை பங்களிப்பு என்ற பெயரில் அரசே வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள பேராசிரியர்கள், அந்தத்  தொகையை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பத் தர அரசு மறுத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக திமுக அரசுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திமுக அரசு அறிமுகம் செய்துள்ள ஓய்வூதியத் திட்டம் குறித்து 3 நாள்களுக்கு முன் நான் என்னென்ன குற்றச்சாட்டுகளையெல்லாம் முன்வைத்தேனோ, அவை அனைத்தும் உண்மை என்பதை அரசு ஊழியர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். திமுகவின் ஓய்வூதியத் திட்ட மோசடி பல்லிளிக்கத் தொடங்கி விட்டது.

இதையும் தாண்டி திமுக அரசின் ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்து விட்டாலும் கூட, அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தேர்தலுக்கு முன்பாக இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரப்போவதில்லை. இந்தத் தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்குகளை ஏமாற்றி வாங்கி வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை திமுக அறிவித்துள்ளது. ஒருவேளை திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் கூட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வராது என்பது தான் உண்மை ஆகும்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்தாலும், அது செயல்பாட்டுக்கு வரப்போவதில்லை. எனவே, எவரும் திமுக அரசை நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்களை ஏமாற்றிய திமுக அரசை வரும் தேர்தலில் வீழ்த்துங்கள். அதன் பிறகு அமையும் ஆட்சியில்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்  திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories