விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

Published:

1001368925 - 2026

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு ஆலையில் மீண்டும்
வெடி விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வீரர்கள், போலீசார் காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
20 பேர் உயிரிழப்பு 6 பேர் காயம் என முதற்கட்ட தகவல்.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் இன்று மாலை நடைபெற்ற வெடிவிபத்தில் 4அறைகள் சேதமாகின.20 பேர் உயிரிழந்துள்ளனர் 6 பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி.
இங்கு கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.இது டி.ஆர்.ஓ.லைசன்ஸ் உடன் இயங்கி வருகிறது.
இதில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைகள் இயங்காது.
தேர்தல் நாளான 23 ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இன்று
வேலை வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு அறையில் உராய்வு காரணமாக திடீரென பட்டாசு வெடித்தது.தீயானது மற்ற அறைகளுக்கும் பரவியது.வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன.
23 பேர் உயிரிழந்துள்ளனர்
பலர் காயமடைந்தனர் .

தகவலறிந்த சிவகாசி சாத்தூர் விருதுநகரை சேர்ந்த தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீயணைப்புத் துறையினர்
தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல் கருகிய நிலையில் உள்ளதால் ஆண் பெண் என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் மீண்டும்
இரவு வெடி விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வீரர்கள், போலீசார் பலர் பலத்த காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி. இங்குள்ள வனஜா பட்டாசு ஆலையில் ஞாயிறன்று மாலை திடீரென ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தை பார்வையிட மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் அமைச்சர்கள் சென்றனர். இந்நிலையில் தீயணைப்புத்துறையினர் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்களின் உடல்கள் ஏதும் சிக்கியுள்ளதா? என பார்த்து அதை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்த வேதிக் கலவையானது யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில், தீயணைப்பு வீரர்கள், போலீசார் சிலர் காயமடைந்தனர்.

விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் 6போலீசார் காயமடைந்த தாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img