பிஎஸ்என்எல் உயர் ரக இணைப்புகள் முறைகேடாக சன் டிவிக்கு எடுக்கப்பட்ட விவகாரத்தில், தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் மற்றும் சன் டிவி யின் ஊழியர்கள் இருவர் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அது குறித்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். யாரோ ஒர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை திருப்திப் படுத்துவதற்காக சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் அடிக்கடி தில்லியிலும், சென்னையிலும் சிபிஐ அதிகாரிகள் அழைத்த போதெல்லாம் சென்று விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார்கள். இப்போது திடீரென்று அவர்களைக் கைது செய்து, சன் டிவிக்கு தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாக ஒப்புக் கொள்ளும்படி அடித்து துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். சிபிஐ மூன்றாம் தர நடத்தையை அவர்கள் மீது காட்டியுள்ளது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் தயாநிதி மாறன்.
யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை மகிழ்விக்க சிபிஐ முயற்சி செய்கிறது: தயாநிதி மாறன்
Popular Categories


