விஷ்ணுப்ரியா தற்கொலைக்கு உயரதிகாரிகள் நெருக்கடி: யுவராஜ் வெளியிட்ட ஆடியோ

சற்றுமுன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில், அவரது உயரதிகாரிகளால் தற்கொலைக்கு நிர்பந்தப் படுத்தப்பட்டு, அவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்று குற்றம் சாட்டி யுவராஜ் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

இன்று காலை 9 மணி அளவில் வாட்ஸ்-அப் மூலம் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரபரப்பாக சுற்றி வரும் இந்த ஆடியோவில், ஐ.ஜி., எஸ்பி., என அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி இவர் தனது ஆடியோவில் குரல் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த தற்கொலை விசாரணையில் காதல் வழக்கு என்று திசை திருப்பப் படுவதாகக் குற்றம் சாட்டுகிறார்.

மேலும், டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவுடன் யுவராஜ் பேசும் செல்போன் வழி ஆடியோ பதிவும் இந்த ஆடியோ தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

அவர் வெளியிட்ட முழு ஆடியோ:

 

( போலீஸாரால் தேடப்பட்டு வரும் ஒரு நபரின் ஆடியோ பதிவு இது. இந்த ஆடியோ பதிவில் குற்றம் சாட்டப்படும் நபர்கள் காவல் துறை உயரதிகாரிகள். இதன் நம்பகத்தன்மை எத்தகையது என்பது அனுமானிக்க இயலாதது என்றாலும், ஊடக அறத்தை ஒட்டி குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் குரலும் சமூகத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்று கருதி வெளியிடுகிறோம். இந்த ஆடியோ பதிவு போலீஸாரின் விசாரணைக்கு உதவுமா அல்லது திசை திருப்புமா என்பது காவல் துறைக்கே வெளிச்சம்.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.