மே 21ல் பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம்

சற்றுமுன் தமிழகம்

07 May15 plus 2 - 2026பிளஸ்2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ம் தேதி வழங்கப்படும் என்றும், பள்ளிகளில் நேரடியாகவும், பிற்பகலில் இணையதளம் மூலமாகவும் தற்காலிசான்று பெறலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருப்பதாக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 1ந்தேதி பிளஸ்2 தேர்வுகள் தொடங்கின. சுமார் 1 மாதம் காலமாக நடைபெற்ற இந்த தேர்வை  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். அதைத்தொடர்ந்து வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மதிப்பெண்கள் கணினியில் ஏற்றப்பட்டப்பட்டு, மாணவ மாணிவிகளுக்கான சர்டிபிகேட் தயாராகும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், நாளை காலை தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும், தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் அவர்களின் பள்ளிகளில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றும், அல்லது இணையதளம் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

www.dge.tn.nic.in, ww.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.