தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Published:

 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
குமரிக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img