தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத்க்கு பாகிஸ்தான் ராணுவ பாதுகாப்பு

Published:

 
 
சோட்டா ராஜன் கைது செய்யப்பட்தை தொடர்ந்து தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத் இப்ராகிமுக்கு அளித்து வரும் பாதுகாப்பை பாகிஸ்தான் பலமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
 
தாவூத் இப்ராகிம் குறித்து சோட்டா ராஜனுக்கு பல தகவல்கள் தெரியும் என்பதால் தாவூத் குறித்த அனைத்து விவரங்களையும் அவர் சிபிஐயிடம் கூறி விடுவார் என்பதால் முன்னெச்சரிக்கையாக தாவூத்துக்கு அளித்து வரும் பாதுகாப்பை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகரித்துள்ளதாக பரவலாக சொல்லப்படுகிறது.
 
1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத் இப்ராகிம். கட்த 20 வருடத்திற்கும் மேலாக இவர் பாகிஸ்தானில் அந்த நாட்டு அரசின் ஆதரவுடனும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் ராணுவத்தின் பாதுகாப்புடனும் வசித்து வருகிறார்.
 
இஸ்லாமாபாத், கராச்சி என பல இடங்களில் மாறி மாறி வசித்து வரும் தாவூத் இப்ராகிம் தற்போது கராச்சியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
 
தாவூத்வசித்து வரும் அவரது கராச்சி வீட்டுக்கு வெளியே கமாண்டோப் படையினரை பாதுகாப்புக்காக தற்போது குவித்து வைத்துள்ளதாம் பாகிஸ்தான் ராணுவம். இந்த கமாண்டோக்கள் அனைவரும் ராணுவக் கமாண்டோக்கள் ஆவர்.
 
இந்த நிலையில் தாவூத்தின் முன்னாள் கூட்டாளியும், தாவூத் குறித்து நன்கு அறிந்தவருமான சோட்டா ராஜன் சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் பாலி தீவில் வைத்து சிக்கினார்.
 
சோட்டா ராஜன் கைது தாவூத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம், தாவூத் நெட்வொர்க் குறித்து பல முக்கிய விவரங்கள் சோட்டா ராஜனுக்குத் தெரியாமல் அவர் மூலமாக தாவூத் நெட்வொர்க்கை இந்தியா தகர்க்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் எழுந்துள்ளது.
 
மேலும் சோட்டா ராஜன் மூலம் பெறும் தகவல்களை வைத்து தன்னை கொல்லவோ அல்லது அதிரடியாக உயிரோடு பிடிக்கவோ இந்திய உளவுத்துறை முயலலாம் என்ற அச்சமும் தாவூத்துக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே அச்சத்தில்தான் பாகிஸ்தான் ராணுவமும் உள்ளது. பாகிஸ்தான் ராணுவம். தாவூத் கராச்சியில் பாதுகாப்புடன் வசித்து வருவதை சோட்டா ராஜனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
எனவே தாவூத் இப்ராகிமுக்கு அளித்து வரும் பாதுகாப்பை பாகிஸ்தான் பலமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுவது என்பது குறிப்பிடத்தக்கது
 

 

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img