பாகிஸ்தான் ஏஜெண்டு ஷாருக்கான் : சாத்வி பிராச்சி

Published:

 
சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டதாக பலரால்
கூறப்படுபவர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி
 
சகிப்புத்தன்மை குறித்த அவர் கூறிய கருத்திற்காக, அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும். மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை, ஷாரூக் கான் திருப்பியளிக்க வேண்டும் என்று சாத்வி தற்போது கூறியுள்ளார்.
 
மேலும் சாத்வி பிராச்சிதான், ஷாருக்கான் கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் நடித்த படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் முன்பு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
முன் கதை:-
 
மும்பையில் 50-வது பிறந்த நாளை ஷாருக்கான் நேற்று கொண்டாடினார். அப்போது இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கே கருத்து சுதந்திரம் உண்டு. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. இந்நிலை தொடருமேயானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவதற்கு பெரும் தடைக்கற்களாக இருக்கும் என கூறி இருந்தார்.
ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img