வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவிச் செல்லும் இரண்டு புகைப்படங்கள் வாட்ஸ் ஆப்பில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது .
மேலும் இது சம்பந்தமாக வாட்ஸ் ஆப்பில் கூறப்படும் தகவல் :-
வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சவுதி பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த,தொப்புள் கொடியுடன் காணப்பட்டசிசுவொன்றை நாயொன்று தூக்கிச்சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது. மேலும் வாசலில் நின்றுகுரைத்துமுள்ளது. வீட்டில் உள்ளோர்வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டுஅதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும்குழந்தைக்கு காயமேதும்ஏற்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. நாயின் புத்திக் கூர்மையான செயற்பாட்டால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் புகைப்படத்துடன் தகவல் கூறப்படுகிறது .


