அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையின் மூலம் ரூ.5800 கோடி சுருட்டல் : மு.க.ஸ்டாலின்

Published:

 
 
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தைராணிப்பேட்டை மற்றும் வாலாஜாவில் மேற்கொண்டு மணல் திருட்டுக்கு எதிரான அமைப்பினருடனான கலந்துரையாடிய போது அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையின் மூலம் ரூ.5800 கோடி சுருட்டப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
வாலாஜாவில் மணல் திருட்டுக்கு எதிரான அமைப்பினருடனான கலந்துரையாடலில் அவர் கலந்து கொண்டார். முதலில் பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளை, அதை தடுக்கும் வழிகள், கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை அவர்கள் தெரிவித்தனர்.
 
அதற்கு பதிலளித்து ஸ்டாலின் அவர்களிடம் கூறியதாவது:
 
மணல் கொள்ளையில் ஈடுபடும் குவாரிகளை எதிர்த்தும், கொள்ளையை எதிர்த்து போராடி வரும் பாலாறு பாதுகாப்பு இயக்கங்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளீர்கள். கரூர் மற்றும் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே ஆறுகளை கொள்ளையடித்து வருகின்றனர்.
 
கடந்த நான்கரை ஆண்டுகாலமாக மக்களுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டு வருகிறது, எந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்து வருகின்றீர்கள் என்று உங்களுக்கே தெரியும். உங்களுடைய கருத்துக்களையும், மனுக்களையும் அளித்துள்ளீர்கள். அந்த மனுக்களை ஆய்வு செய்தும், சிந்தித்தும், வரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்து அறிவிக்கப்படும்.
 
 
அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளை எப்படி நடக்கிறது என்பதை நீங்களே தெரிவித்துள்ளீர்கள். தாம்பரம், பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டம், பூந்தமல்லி கூட்டு குடிநீர் திட்டம் என 15 திட்டங்கள் பாதியளவில் நிறைவு பெற்று, மீதி பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. மணல் கொள்ளையால் 1.25 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. 300 ஏரிகள் வறண்டுள்ளன. மணல் அள்ளுவதால் ரூ.5,825 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால் அரசுக்கு வெறும் ₹76 கோடி மட்டுமே வருகிறது. மற்ற பணத்தை எல்லாம் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தவுடன் மணல் கடத்தலை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் இயற்கை வளங்கள் மற்றும் ஆற்று மணல் கொள்ளைகளை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு அமைக்கப்படும். அதில் சமூக சேவகர், ஊர் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் இணைந்து மணல் கொள்ளை தடுக்கப்படும்.
 
மேலும் மணல் வருமானத்தில் ஒரு ைபசா கூட வேறு எங்கும் செல்லாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் மணல் கடத்தலை தடுக்க முழு சுதந்திரம் வழங்கப்படும். மணல் தடுப்பதில் எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல் ஒழிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
 
 
 
 
 
.
ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img