15 June13 SVe Sekar - 2026பேரனுக்கு நாளை பிறந்த நாள் கொண்டாடுவதற்காக போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார்.

பிரபல பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பெரிய அளவில் பிரச்சனை ஆனது. இந்த பிரச்சனையில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை பேஸ்புக்கில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார். சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.

ஆனால் இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை.அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார்.
ஆனால் உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. ஆனால் தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது,

இந்த நிலையில் சென்னையில் எஸ்.வி.சேகரின் பேரனுக்கு நாளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அவரது வீட்டில் பெரிய அளவில் தயாரிப்புகள் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

இதற்காக எஸ்.வி. சேகர் நேற்றில் இருந்தே வீட்டில்தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவரை அந்த பகுதியில் பார்த்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக முக்கியமான நபர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க எஸ்.வி.சேகர் திட்டமிட்டுள்ளார்.

சில முக்கிய பாஜக பிரபலங்கள், சில ஆளும் கட்சி பிரபலங்கள், சினிமா நண்பர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு இதற்காக பத்திரிக்கை கொடுத்து வருகிறார். நாளை நிகழ்வில் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இவர் நேற்றில் இருந்தே இதற்காக, சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார். இதற்கு பத்திரிகை கொடுத்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்ட போதுதான், அந்த புகைப்படம் வெளியானது. அவர் போலீஸ் பாதுகாப்புடன்தான் பத்திரிக்கை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending