பீடியை சிறு குழந்தைக்கு கொடுத்து புகைக்க வைத்த கொடுமை ! : தமிழகத்தில் புகையிலை விற்பனைக்கு எதிராக போராட்டமா ?

சற்றுமுன்

தமிழகத்தில் சிறு குழந்தைக்கு ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து பீடியை கொடுத்து புகைக்க வைத்து கைப்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிறு குழந்தைக்கு சிலர் மதுவை கொடுத்து குடிக்க வைத்தனர். மேலும் குழந்தை மது குடித்ததை கைப்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். மேலும் அந்த காணொளி வாட்ஸ் ஆப்பிலும், ஊடகங்களிலும் வைரலாகப் பரவியது.

இதனால் ஏற்கெனவே மது விற்பனைக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டங்கள் தீவிரம் அடைந்து தமிழக அரசுக்கு சொந்தமான மதுக்கடைகள் எரிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறின.

மது விற்பனைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்ததால் தமிழக அரசுக்கு மிகுந்த தலைவலியும், குடைச்சலும் ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு சிறு குழந்தைக்கு மதுவை கொடுத்து குடிக்க வைத்தவர்கள்மீது காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் அடிப்படையில்
பலர் கைதும் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து சிறு குழந்தைக்கு பீடியை கொடுத்து புகைக்க வைத்து கைப்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளார். அந்த காணொளி தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாகப் பரவி வருகிறது.

பீடியை குழந்தைக்கு கொடுத்து புகைக்க வைத்தவர்களை கண்டுபிடித்து காவல் துறையினர்மூலம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்னையை கையில் எடுத்து அரசியல் கட்சிகள் போராட்டங்கைள தீவிரம் அடையச் செய்வது வாடிக்கையான ஒன்றுதான்!

சிறு குழந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தமைக்கு போராட்டங்களை நடத்திய அரசியல் கட்சியினர் பீடியை குழந்தைக்கு கொடுத்து புகைக்க வைத்தமைக்கு எதிராக போராட்டங்களை நடத்தாமல் இருக்கவா போகிறார்கள்?

சிறு குழந்தைக்கு பீடியை கொடுத்து புகைக்க வைத்து கைப்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.