17 ஆண்டுகளாக  இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Published:

 

கோவை மாவட்டத்திலுள்ள , பெரியநாயக்கன்பாளையம்  சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரின் 70 வயதான  மகன் மாகாளி. கூலித் தொழிலாளியான அவர் தனது தம்பி பழனிச்சாமி (37) என்பவருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார்.

 மாகாளியின் மனைவி பழனாத்தாள்( 42) மற்றும் பழனிச்சாமி ஆகியோரிடையே கள்ள உறவு இருப்பதாக சந்தேகமடைந்தார். இதனால், ஏற்ப்பட்ட குடும்ப தகராறில், 1998-ம் ஆண்டு ஜூலை, 19-ம் தேதி இரவு, 2:00 மணிக்கு பழனிசாமியையும், மனைவி பழனாத்தாளையும் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தார்.

 நடைபெற்ற  இரட்டைக் கொலை தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தினர்  வழக்கு பதிவு செய்து மாகாளியை தேடி வந்தனர்.தமிழகத்தைவிட்டு   17-ஆண்டுகளாக தலைமறைவாக பெங்களூருவில் தங்கி, கூலி வேலை செய்து கொண்டு  கடந்த தீபாவளிக்கு முன்வரை   இருந்துள்ளார்.

 இந்நிலையில் கோவை மாவட்ம்ட அன்னுார் அருகிலுள்ள, காரனுார் கிராமத்தில் தீபாவளி கொண்டாட  அவரது உறவினர்  வீட்டுக்கு  வந்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அதன் அடிப்படையில்  பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத் ஆய்வாளர் வெற்றிவேந்தன்,  உதவி ஆய்வாளர்

செந்தில்குமார் ஆகியோர்  காரனூர் சென்று 17 ஆண்டுகளாக  இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாகாளியை கைது செய்து,கோவை மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாகாளியை கோவை மாவட்ட சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img