ஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

lakshmi ramakarishnan - 2026

சென்னை: மர்ம நபர்கள் சிலர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று கூறி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சென்னை, அம்பத்தூர் இணை ஆணையர் விஜயகுமாரியிடம் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இன்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ஐயப்பன்தாங்கலில் உள்ள பிரஸ்டீஜ் பெல்லா விஷ்டா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நான் வசித்து வருகிறேன். அந்தக் குடியிருப்பில் உள்ள 1300 குடும்பங்களுடன் சேர்ந்து நலச்சங்கம் துவங்க முயற்சிப்பதால் எனக்கு சிலர் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

டிவி.,யில் பஞ்சாயத்து பண்ணி பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இப்போது பஞ்சாயத்துக்காக போலீஸ் ஸ்டேஷனை நாடி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.