காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: பஸ் மோதியதில் ஆம்புலன்ஸில் வந்த 4 பேர் பலி

சற்றுமுன்

சென்னை:
காஞ்சிபுரம் அருகே பஸ், ஆம்புலன்ஸ் மோதியதில், ஆம்புலன்ஸில் வந்த டிரைவர் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்பத்தூர் – காட்ராம்பாக்கம் சந்திப்பு அருகே தனியார் மருத்துவமனைக்குச் செந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தில் மார்பு வலியால் துடித்த ராஜேந்திரன் என்பவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அவர், மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய மனைவி விஜயா, அவர்களின் மகன் சத்யநாராயணன் ஆகியோரை ஏற்றிக் கொண்டு வந்த இந்த ஆம்புலன்ஸ், காஞ்சி – ஸ்ரீபெதும்புதூர் சாலையில் வந்த போது, பஸ் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த பெரியசாமி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி ஆயினர்.
ஸ்ரீபெரும்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயகுமார், ஆய்வாளர் பாலு சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://www.dhinasari.com