நேர்மையாளர் கே.பாக்யராஜ்க்கு குவியும் பாராட்டு! கதையே திருட்டு! இவுஹ நேர்மையான சர்கார் அமைப்பாஹளாம்..! இன்னாங்கடா கத வுட்றீங்க..!?

bhagyaraj horz - 2026

சர்கார்… என்றால் அரசு! செங்கோல் என்றால் நீதி நெறி வழுவாத நல்லாட்சி என்பதன் குறியீடு! செங்கோல் நழுவுதல் என்றால் நீதி செத்துப் போய் விட்டது என்று பொருள். இந்த செங்கோல் என்ற அழகான தமிழ்ச் சொல், பண்டைய தமிழனின் குறியீடு! ஆனால், சர்கார் என்பது ஆங்கிலேயன் விட்டுச் சென்ற எச்சம். தமிழின் எதிர், தமிழின விரோதி..! இந்த இறக்குமதி சொல்லைத்தான் படத்தின் தலைப்பாக வைத்தார்கள் என்று பார்த்தால்… படத்தின் கதையே கபடத்தின் உருவாக அமைந்திருக்கிறது! திருட்டுக் குழந்தைக்கு பட்டுச் சட்டை போட்டு என் குழந்தை என்று பீற்றிக் கொள்ளும் நடைமுறைக்கு சன் குழுமம், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஒட்டுமொத்தமாக வந்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸின் டிராக் ரெக்கார்ட் கொஞ்சம் ‘வீக்’காகவே இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்! இவர் இயக்கிய ரமணா திரைப்படமே நந்தகுமார் என்பவரின் கதையாம்! பின்னாளில் அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட கேப்டன் விஜயகாந்த், முருகதாஸிடமிருந்து சில லட்சங்களைப் பிடுங்கி நந்தகுமாருக்குக் கொடுத்ததாகவும், அதன் பின்னும் தனது நடிப்பில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பளித்து அந்தப் பாவத்தை கேப்டன் கழுவிக் கொண்டார் என்றும் திரையுலகில் இன்றும் கிசுகிசுக்கிறார்கள்!

அடுத்து, ‘கத்தி படமே என் கதைதான்’ என்று முடிந்தவரை போராடினார் கோபி நயினார்! நீதிமன்றம் சென்றது வழக்கு! பீஸ் நிறையப் பெற்ற வலுவான வக்கீல்கள் சத்தியத்தைக் கொன்று சட்டத்தை நிலைநாட்டிக் கொண்டார்கள்! கோபி நயினார் தனித்துவிடப்பட்டார்! அடுத்ததாக இப்போது கிளம்பியிருக்கும் பூதம்… வலுவான பூதம்! வசமாக மாட்டிக் கொள்ள வைத்திருக்கிறது!

sarkar vijay cry - 2026

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விரைவில் வெளிவரவிருக்கும் ‘சர்கார்’ என்னுடைய கதை என்று நீதிமன்றத்தின் படிகளில் ஏறியிருக்கிறார் வருண். முன்னதாக திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தனது செங்கோல் கதையை 2007 இல் பதிவு செய்திருக்கிறார் வருண். இந்த தைரியத்தில் கோடம்பாக்கத்தில் நிறைய ஹீரோக்களிடம் கதை சொன்னவர், ஒரு கட்டத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கதையைச் சொன்னதாகவும்… ‘இவ்வளவு டெப்த் ஆன அரசியல் கதையில் விஜய் இப்போது நடிக்க முடியாது. சில காலம் பொறுத்திருங்க’ என்று வருணிடம் சொல்லப்பட்டதாகவும் தகவல்! அதன் பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகரிடமே இரண்டு வருடங்கள் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார் வருண்.

தொடர்ந்து, ஒரு கட்டத்தில் விஷாலுக்காக இந்தக் கதையை சொல்லப் போயிருக்கிறார். விஷாலிடம் வருணை அழைத்துச் சென்றவர், ஏ.ஆர்.முருகதாசின் ஸ்டில் போட்டோகிராபர் விஜய். அப்போது, அருகே இருந்த விஜய், வருண் சொன்ன முழுக் கதையையும் கேட்டு, அதை அச்சு பிசகாமல் அப்படியே முருகதாஸிடம் ஒப்பித்தாராம்! (இப்படி சந்தேகப்படுவது திரைப்பட எழுத்தாளர் சங்கம்தான்)

இத்தகைய சூழ்நிலையில், சர்கார் கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் என தீர ஆராய்ந்து, விசாரித்து, தீர்ப்பும் அளித்துவிட்டார் சங்கத் தலைவர் ‘உங்கள்’ கே.பாக்யராஜ்.

ஆனால்… இப்படி ஒரு நேர்மையான தீர்ப்பைத் தர விடாமல் தடுத்த சக்திகள் பலர்! அத்தனை பேரும் தமிழ் சினிமாவின் முன்னணி இடத்தில் இருப்பவர்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்குள்ளேயே பொறுப்பில் இருக்கும் நடிகர் ரமேஷ் கன்னாவின் மகன், ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக இருக்கிறார். ஆக… ரமேஷ் கன்னா பிரம்ம பிரயத்தனம் செய்துள்ளார்.

பாக்யராஜிடம், இப்போ நீங்க சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வர்றீங்க… மோதுறது பெரிய ஆளுங்க… இனி எந்தப் படத்திலும் நடிக்க முடியாத அளவுக்கு போய்விடும். பாத்துக்கங்க… என்று கே.பாக்யராஜிடம் #மீடூ ரேஞ்சுக்கு செல்லத்தனமாய் மிரட்டல் விடுத்தவர்கள் சிலர்! பாக்யராஜுக்கே இந்த கதி என்றால், சாதாரண பாடகிகளும் பாட வரும் பெண்களும், சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க வரும் நடிகைகளும் என்ன நிலைக்கு ஆளாவார்கள் என்பதைத்தான் இன்று #மீடூ மீட் செய்திருக்கிறது!

இப்போது நேர்மையை நிலைநாட்டிய ’உங்கள்’ கே.பாக்யராஜ் தன் விசாரணையையும் தீர்ப்பையும் எழுத்து பூர்வமாகவே வருணிடம் வழங்கிவிட்டார்! அது இப்போது நீதிமன்ற மேஜையின் முன் வைக்கப் பட்டிருக்கிறது. அதே நேரம் பாக்யராஜின் நேர்மைக்கு சபாஷும் சல்யூட்டும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகில்! பண பலத்துக்கும் அதிகாரத்துக்கும் அடிபணிந்து, ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா என்று ஏக்கப் பட்டு வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையைத் தராமல், நேர்மையை வெளிப்படுத்திய பாக்யராஜுக்கு ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து திரையுலகில் கூறப்படுவது…. சர்கார் கதை தொடர்பாக இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஒன்று கூடி விசாரித்தனர். சர்கார் படத்தின் கதை சுருக்கத்தையும், வருண் ராஜேந்திரனின் செங்கோல் பட கதை சுருக்கத்தையும் வாங்கிப் படித்து பார்த்தனர். இதில் இரு கதைகளும் ஒன்று என்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கதை திருட்டு நடக்கவில்லை என்று இயக்குனர்கள் மனோஜ்குமார், ரமேஷ் கண்ணா, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட 6 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், 5 பேர் சர்கார் திருட்டுக் கதை என்று குரல் கொடுத்தனராம்! மேலும் இருவர் நடுநிலை வகித்துள்ளனர். 2 பேர் கருத்து சொல்ல விரும்ப வில்லை என்று கூறி உள்ளனர்!

அந்த நிலையில், சர்கார் கதையில் திருட்டு நடக்கவில்லை என்று அறிவிக்கும்படி கே.பாக்யராஜுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப் பட்டதாம். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத பாக்யராஜ் உண்மையின் பக்கம் இருக்கப் போவதாகக் கூறி சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்று தான் என்று அதிகாரபூர்வமாக நீதிமன்றத்திற்கு கைப்பட எழுதப்பட்ட கடிதத்தை வழங்கியுள்ளார். இதுதான் இப்போது, சர்கார் படத்திற்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் என்ன உத்தரவு வரும் என இரு தரப்பும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பாக்யராஜ் ஒருதலைப் பட்சமாக கடிதம் கொடுத்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்! நான் ஒன்றும், கதை திருட சினிமாவுக்கு வரவில்லை என்றும் இது என் மீதான தாக்குதல் அல்ல! வழக்கமாக விஜய் படத்திற்கு வரும் பிரச்னை என்று கூறி திசை திருப்ப முயற்சி செய்து வருகிறார். மேலும், எனது படத்தின் கதை ஒரிஜினல் என்பது போல விளக்கம் அளித்துள்ளார். இதனால் சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் சமாதானம் ஏற்பட வழியில்லை என்கிறார்கள்.

இதனால் படம் வெளிவருவதில் சிக்கல் இருக்கும் என்கிறார்கள். அதற்காக, வரும் 2ம் தேதியே சர்காரை வெளியிட்டு விடலாமா என்று கூட ஆலோசனை நடந்துள்ளது. இருப்பினும், கதைக்காக குறிப்பிட்ட தொகையை பிணையாக கட்டச் சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தால் படம் வெளிவருவதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது. அப்படி இல்லாமல், வருண் ராஜேந்திரனுக்கு சொந்தமான கதை என்று தீர்ப்பு வந்தால், படத்தில் கதை- வருண் ராஜேந்திரன் என்று டைட்டில் கார்டு போட வேண்டியிருக்கும்! அப்படி போட்டால், படம் மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட வேண்டும்..! சென்சாருக்குப் போனால், குறைந்தது ஒரு வாரமாவது ஆகும்..! அதற்குள் தீபாவளி முடிந்து விடும் என்கின்றனர் திரை உலகினர்..!

ஏ.ஆர். முருகதாஸின் பிடிவாதம், சர்கார் வெளியாவதில் தடை தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை பணம் கொடுத்து வருண் ராஜேந்திரனை சமாதானம் செய்தால் படம் வெளியாவதில் சிக்கலும் இருக்காது என்றும், அதே நேரம் முருகதாஸ் ஒரு கதை திருடர் என்ற பழி வந்து சேரும் என்றும் கூறுகின்றனர். இப்போது சர்கார் வெளியாவதும் தடையாவதும் நீதிமன்றத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories