செய்தி பதிவை இப்படி சமூக ஊடகங்களில் தவறாகப் போட்டால் காறித் துப்பாம விடுவாங்களா ? என்னமா சொல்லுறீங்க ?

 
சென்னை அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் ஊடக துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்கள? என்று தூ என காறித் துப்பினார்.
இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகத்தில் ஊடக துறை சார்ந்த சங்கங்கள் விஜயகாந்துக்கு எதிராக காவல் துறைனரிடம் புகார் மனு அளித்தும், ஒரு சில சங்கங்கள் விஜயகாந்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் இன்று விஜயகாந்தை கண்டித்து அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தியை தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் தலைமையகம் என்ற முகனூல் பக்கத்தில் புகைப்படங்களுடன் செய்தி பதிவின் ஆரம்பத்திலேயே தவறான அர்த்தம் கொ(ல்)ள்ளும்படி
( தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் ( TUJ ) சார்பில், விஜயகாந்தை அநாகரிகமாக நடந்து கொண்டார் ) என வார்த்தை அமைப்பை உருவாக்கி பதிவிட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முகனூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது :-.
 
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் ( TUJ ) சார்பில், பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி அநாகரிகமாக நடந்து கொண்ட தழிழக எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தை கண்டித்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டின் முன் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்க்கு TUJ மாநில தலைவர் தோழர் DSR சுபாஷ் அவர்கள் தலைமை தாங்கினார் .
நெற்றிக்கண் ஆசிரியர் A.S. மணி முன்னிலை வகித்தார் .TUJ மாநில துணை பொது செயலாளர் கொழுமம் V.தாமோதரன் ,TUJ சட்ட ஆலோசகரும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் Dr.D.சிவசங்கரன் வழக்கறிஞர், TUJ நிர்வாகிகள் கழுகு K. ராஜேந்திரன், பிரஸ் குமார், S.J ஜெனர்தனம், விஸ்வரூபம் K.R.கணேஷ், பீப்புல் டுடே G. சத்தியநாராயணன், கழுகு வீரராகவன், நரிஅரி கிருஷ்ணமூர்த்தி, அனந்தராமன், தர்மபுரி சசிகுமார், சித்ரா ரவீந்தரன், ஜெயஸ்ரீ, அம்பத்தூர் வினோத்குமார், ,சக்திவடிவேல் மற்றும் 100 க்கும் மேற்ப்பட்டTUJ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியை அனைத்து ஊடகத்துறையைச் சார்ந்த செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், செய்தி சேகரித்தனர்
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு விருகம்பாக்கம் காவல்துறையை சேர்ந்த ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் .
செய்தி :- பாடி பா.கார்த்திக்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர். என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
தவறான அர்த்தம் கொ(ல்)ள்ளும் படியாக வார்த்தை அமைப்பை உருவாக்கி பதிவிடபட்ட பதிவு சிவப்பு குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது .
செய்தி பதிவை இப்படி தவறாகப் போட்டால் காறித் துப்பாம விடுவாங்களா ? என்னமா சொல்லுறீங்க?