குவைத்தில் மரணம் அடைந்த வாலிபரின் சடலத்தை பெற்று தர மாவட்ட ஆட்சியரிடம் மனு

 
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மனைவி சந்திரம்மாள், மாவட்ட ஆட்சியர் ஞானசேகரனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது :-.
கடந்த ஓராண்டாக எங்களது மகன் பாலாஜி, 28, குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதில் மரணமடைந்ததாக, அவருடன் பணிபுரியும், பிரபாகரன் என்பவர் தகவல் தெரிவித்தார்.
குவைத்தில் மர்மமான முறையில் இறந்த, என் மகனின் உடலை, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் .