
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலையில் பூஜைகள் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த பூஜைகள் இன்று முதல் கும்பாபிஷேக நாள் வரை நடைபெறும்.வரும்ஜூலை 7ஆம் தேதி வேத நாராயண முறைப்படி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
தமிழ் கடவுள் என்று பக்தர்களால் கோலாலகமாக கொண்டாடப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் உள்ளது. கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்த அறுபடை வீட்டிற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து முருகனை தரிசிப்பது வழக்கம்.
இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 7் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அன்றைய நாள் 6மணி கங்கு துவங்கி காலை 9மணி முதல் காலை 10.30 மணிக்குள் இந்த கும்பாபிஷேக விழா நடக்கிறது.
குடமுழுக்கு விழா அறிவிப்பு வெளியானது முதலே திருச்செந்தூர் வழக்கத்தை விட கூடுதலாக களைகட்டி காணப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலையில் பூஜைகள் இன்று தொடங்கியது. இந்த பூஜைகள் இன்று முதல் கும்பாபிஷேக நாள் வரை நடைபெறும். யாகசாலை நடக்கும் இடம் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. யாகசாலை நடக்கும் இடத்தில் 5 தலை நாகம், முனிவர்கள், நந்தி சிலைகள் போன்ற பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலில் நேற்று மூலவரான சுப்ரமணிய சுவாமிக்கு குடமுழுக்கு நடத்துவதற்கான அனுமதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேகத்திற்காக நடத்தப்படும் யாகசாலை பூஜை 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாக சாலையில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முருகனை தரிசிப்பதற்கும், அவர்கள் வந்து செல்வதற்கு தோதாகவும் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் கடற்கரைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஜகோபுரத்தைச் சுற்றி அர்ச்சகர்கள் கலசத்தை மேலே எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக நாளில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்படும் கும்பம் அதாவது கலசம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அனைத்து கலசங்களிலும் புனித நீராக ஊற்றப்படும். குறிப்பாக, திருச்செந்தூர் முருகன் கோயிலின் ராஜகோபுரத்தில் இந்த கலசநீர் ஊற்றப்படும் அந்த நிகழ்வை முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் காத்துள்ளனர்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக அவர்கள் அமரும் வகையில் 2 ஆயிரம் சதுர அடி கேலரி அமைக்கப்பட்டுள்ளது. 12 கால யாக பூஜையும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஏதுவான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தின்போது கலசத்திற்கு ஊற்றப்படும் புனிதநீர் ல்ட்சக்கணக்கான பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் தெளிக்கப்பட உள்ளது.
இந்த கும்பாபிஷேகத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும், அரசு சார்பில் வரும் 4ம் தேதி முதல் 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்காணித்து வருகின்றனர்.





