விஜயகாந்தின் தூண்டுதலின் பேரில் தே.மு.தி.க. தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்குதல் : பார்த்தசாரதி எம்.எல்.ஏ உள்பட 20 பேர் கைது

 
சென்னை அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் ஊடக துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்கள? என்று ஊடக துறையினரை அவமதிக்கும் வகையில்தூ என காறித் துப்பினார்.
இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகத்தில் ஊடக துறை சார்ந்த சங்கங்கள் விஜயகாந்துக்கு எதிராக காவல் துறைனரிடம் புகார் மனு அளித்தும், ஒரு சில சங்கங்கள் விஜயகாந்தை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்தை கண்டித்து அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த இன்றும் செய்தியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர்.
விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் திரண்ட செய்தியாளர்கள் விஜயகாந்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் தே.மு.தி.க. தொண்டர்கள் பார்த்தசாரதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அங்கு திரண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது.
இதையடுத்து தே.மு.தி.க.வினர் செய்தியாளர்களை விரட்டி விரட்டி தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தே.மு.தி.க.வினரை தடுக்க முயன்றனர். அதையும் தாண்டி சென்று தே.மு.தி.க வினர் அத்துமீறி சென்று தாக்கினர். மேலும்செய்தியாளர்களின் வாகணத்தையும் அடித்து நொறுக்கினர்
இதில் பத்திரிகையாளர்கள் 3க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தே.மு.தி.க. வினரை விரட்டியடித்தனர்.
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தே.மு.தி.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பார்த்த சாரதி உள்பட தே.மு.தி.க. தொண்டர்கள் 20 பேரை கைது செய்தனர்.
விஜயகாந்தின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தே.மு.தி.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பார்த்த சாரதி பத்திரிகையாளர்களை வீடு புகுந்து தாக்கப் போவதாகவும் ஏற்கனவே மிரட்டியவர் என்பது குறிப்பிடதக்கது.
விஜயகாந்தின் தூண்டுதலின் பேரில் தே.மு.தி.க. தொண்டர்கள் செய்தியாளர்களை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்திய காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.