ரஜினி நடித்துள்ள 2.0 படம் தமிழ் ராக்கர்ஸ் உள்பட 12,567 இணைய தளங்களில் வெளியிட தடை!

Published:

rajini 2 0 - 2026

ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, ரஜினியின் 2.0 படத்தை இணையதளத்தில் வெளியிட தடைகோரி வழக்கு தொடர்ந்தது படத் தயாரிப்பு நிறுவனமான லைகா. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2 பாய்ண்ட் ஓ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வியாழக்கிழமை திரைக்கு வரவுள்ள நிலையில், இணையதளங்களில் படம் வெளியிடப் படுவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 2 பாய்ண்ட் ஓ திரைப்படம் இணையதளத்தில் வெளியானால், தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் எனக் கூறியுள்ள லைக்கா நிறுவனம், இந்த படத்தை இணையதளத்தில் வெளியிடப்போவதாக தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளதாகவும் மனுவில் கூறியிருந்தது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img