ஜல்லிக்கட்டு தடை விதித்தது விதித்ததுதான் : நிர்மலா சீதாராமன்; சீறும் தமிழக வீரர்கள் !

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுக்க மறுத்தது உச்ச நீதிமன்றம். இதனால் தென் மாவட்டங்களில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றுசெய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்ற தடையால் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர இயலாது என்றும் அவர் கூறினார். இருப்பினும், தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது என்று கூறிய அவர், மாநில அரசு தனக்குள்ள 38 ஆம் அதிகாரத்தை பயன் படுத்தி நடவடிக்கை எடுக்கலாம் என பதில் அளித்தார்.

இந்நிலையில், ஜல்லிகட்டு மீதான தடையை நீக்க முடியாது என்ற உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை எதிர்த்து, நெல்லையை அடுத்த வசவப்பபுரம் கிராம மக்கள் மொட்டையடித்து போராட்டம் நடத்தினர்.