
பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது குறித்து தனது சமூகத் தளப் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி பிறந்த நரேந்திர மோடி, இன்று தமது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை அடுத்து பாரதப் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்து குறித்து தெரிவித்த பிரதமர் மோடி, இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்
எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர் டிரம்ப்பிற்கு நன்றி ‘இந்தியா-அமெரிக்க நட்புறவை உலகளவிற்கு எடுத்துச் செல்வோம்.. என்று தெரிவித்துள்ளார். .
வரி விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியா அமெரிக்கா இடையே பதற்றமான சூழலும் உறவில் விரிசல் ஏற்படும் வகையிலான கருத்துக்களும் எழுந்தன. டிரம்ப் ஒரு படி மேலே போய், இந்தியாவை வீழும் பொருளாதாரம் என்று குறிப்பிட்டார். பின்னர் ரஷ்யா சீனாவுடன் கை கோத்து இந்தியா செல்லக் கூடாது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேச்யில் பேசுவதற்கு மூன்று முறை முயற்சி செய்ததாகவும் ஆனால் பிரதமர் அலுவலகம் அதை தவிர்த்து விட்டதாகவும் ஜெர்மனி இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
பின் திடீரென ‘நான் எப்போதுமே மோடியுடன் நண்பராக இருப்பேன்’ எனக் கூறினார் டிரம்ப். இதற்கு, டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவ தாக பிரதமர் மோடி பதில் அளித்தார். இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடிக்கு முதல் நபராக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் டிரம்ப் . அவருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்து பதில் அளித்துள்ளார் பிரதமர் மோடி.





