மோடியை களங்கப்படுத்த நினைப்பவர்கள் கலங்கிப்போய்… அரசியலில் காலமாவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் சாபம்!

சற்றுமுன் மதுரை
pon radhakrishnan - 2026

பிரதமர் மோடிக்கு எதிராக பேசுபவர்கள் அரசியலில் காணாமல் போவார்கள் என்று, மதுரை பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது… 10 ஆண்டுகளில் பெரிய மருத்துவ மாநகரமாக மதுரை மாறும்; தமிழகத்தில் மீண்டும் மிகப்பெரிய கூட்டணியை அமைப்போம்; நாற்பதும் நமதே என்பதுதான் நமது இலக்கு என்று உறுதிபடக் கூறினார்.

தெய்வப் பிறவியா எனக் கூறும் அளவுக்கு மக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியை களங்கப்படுத்த நினைப்பவர்கள் கலங்கிப்போய் அரசியலில் காலமாவார்கள் என்று சாபம் இட்டார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் சம உணர்வோடு வரும் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் நாட்டிற்கு பல முதலீடுகள் வந்துள்ளன என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.