திமுக., கதம் கதம்..! சொல்பவர் எஸ்.வி.சேகர்!

Published:

a raja kanimozhi - 2026

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கும் கல்வி வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக, திமுக., சார்பில் ஆர்.எஸ். பாரதி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

இந்தச் சட்டத்துக்கு துவக்கம் முதலே திமுக., எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனவே, பொதுப் பிரிவினரின் நலனை அழிப்பதிலேயே திமுக., பாடுபட்டு வருகிறது என்ற கருத்து மக்கள் மத்தியில் மேலோங்கியது. அதற்கு ஏற்ப, நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக., எம்.பி., கனிமொழி இந்த சட்ட மசோதாவை எதிர்த்து கடுமையாகச் சாடினார்.

இந்நிலையில், திமுக.,சார்பில் ஆர்.எஸ். பாரதி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக., பிரமுகரான எஸ்.வி.சேகர், அடுத்தவன் வாழக்கூடாது என்ற சிறந்த தத்துவத்தின் பலன் விரைவில் அறுவடை செய்யப்படும். திமுகவை வெளியிலிருந்து யாரும் அழிக்க வேண்டியதில்லை. அதை அவங்களே பாத்துப்பாங்க. கதம் கதம்… என்று கூறியுள்ளார்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

Related articles

Recent articles

spot_img