சென்னை, மதுரை, கோவையில் மின்சார பஸ்கள்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
06 June13 ops - 2026

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 – 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான – ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்…

மாசற்ற மின்சார பஸ்களை போக்குவரத்து துறையில் அறிமுகம் செய்கிறோம்

ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் 5890 கோடி செலவில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள் அறிமுகம்

2000 மின்சார பஸ்கள் வாங்கி பயன்படுத்தப்படும் திட்டம் செயல்படுத்தப்படும்

500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவையில் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்படும்

டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட நிதி இழப்பை சரி செய்ய போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் நிதி தரப்பட்டது

போக்குவரத்து துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1297.83 கோடி ஒதுக்கீடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.