கனமழை; வெள்ளம்… வேகமாக நிரம்பும் அணைகள்! அடுத்த 4 நாட்கள்… கவனம்!

rain oct 17
rain oct 17

குற்றால அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கம்பம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாபநாசத்தில் 27 செ.மீ. மழைப் பதிவு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 27 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மேலும், மணிமுத்தாறு – 10 செ.மீ., வால்பாறை – 7செ.மீ., பாளையங்கோட்டை – 2 செ.மீ., திருநெல்வேலி – 2 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 131.80 அடியாக உயர்வு

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 131.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 8,000 கனஅடியாகவும் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1,300 கனஅடியாகவும் உள்ளது.

கனமழை காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது. 125.78 அடியிலிருந்து 131.30 அடியாக உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் களக்காடு தலையணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் அறிவிப்பு.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

தமிழகத்தில் 16.10.2021 காலை 0830 மணி முதல் 17.10.2021 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (செண்டிமீட்டரில்)

இயல்பிற்கு மாறான அதி கனமழை
பாபநாசம் (திருநெல்வேலி) 27;
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 22;
சித்தார் (கன்னியாகுமரி) 20;

கனமழை
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 11;

மணிமுத்தாறு (திருநெல்வேலி), சூரலக்கோடு (கன்னியாகுமரி) தலா 10;

மேட்டூர் (சேலம்), சின்னகல்லார் (கோயம்புத்தூர்) தலா 9;
சோலையார் (கோயம்புத்தூர்) 8;

மயிலாடி (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 7;

இதர மழையளவுகள்
ஆய்க்குடி, தென்காசி (தென்காசி) தலா 6;

நாகர்கோவில், கொட்டாரம், பூதப்பாண்டி (கன்னியாகுமரி), துறையூர் (திருச்சி), செங்கோட்டை (தென்காசி), கோயம்புத்தூர் AWS (கோயம்புத்தூர்) தலா 5;

பொன்னை அணை, காட்பாடி (வேலூர்), தென்பரநாடு, புள்ளம்பாடி (திருச்சி), கோயம்புத்தூர் தெற்கு, கொவை விமானநிலையம் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) தலா 4;

3 குழித்துறை, இரணியல், கொளச்செல், கன்னியாகுமரி தக்கலை (கன்னியாகுமரி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), சூலூர், பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பல்லடம், ஊத்துக்குளி (திருப்பூர்), லால்குடி, பொன்மலை, மணப்பாறை (திருச்சி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) அரியலூர் (அரியலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), விராலிமலை (புதுக்கோட்டை), குன்னூர் PTO (நீலகிரி), அம்முண்டி (வேலூர்) சிவகிரி (தென்காசி), சேலம் (மாவட்டம் சேலம்) தலா 3;

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), திருச்சி விமானநிலையம், வத்தலை அணைக்கட்டு, கோவில்பட்டி (திருச்சி), உதகமண்டலம் (நீலகிரி), சங்கரன்கோவில் (தென்காசி), ஆத்தூர் (சேலம்), உடுமல்பேட்டை, திருப்பூர் (திருப்பூர்), ஜெயம்கொண்டான், திருமானூர் (அரியலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), சிவகங்கை (சிவகங்கை), ஓசூர் (கிருஷ்ணகிரி), சேரன்மாதேவி, பாளையம்கோட்டை, நாங்குநேரி (திருநெல்வேலி), கோவில்பட்டி (தூத்துக்குடி), (திருச்சி), (மாவட்ட திருப்பூர்), ஆலங்குடி, ஆவுடையார் கோவில் (புதுக்கோட்டை), செங்கம் (திருவண்ணாமலை) தலா 2;

மாரண்டஹள்ளி (தர்மபுரி), காங்கேயம், அமராவதி அணை, அவிநாசி, மூலனூர் (திருப்பூர்), முதுகுளத்தூர், திருவடானை (இராமநாதபுரம்), லப்பைக்குடிகாடு, செட்டிக்குளம், எறையூர் (பெரம்பலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பூதலூர், திருவிடைமருதூர், தஞ்சை பாபநாசம், வல்லம் (தஞ்சாவூர்), அறந்தாங்கி, கீரனூர், பொன்னமராவதி (புதுக்கோட்டை), குளித்தலை, கே .பரமத்தி, பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மாயனூர் (கரூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), வாலாஜா, சோளிங்கர், ஆற்காடு (இராணிப்பேட்டை), ஆரணி (திருவண்ணாமலை), சாத்தான்குளம், திருச்செந்தூர் (தூத்துக்குடி), இராதாபுரம் (திருநெல்வேலி), மருங்காபுரி (திருச்சி), வேலூர் (வேலூர்) தலா 1.

அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அக். 18ம் தேதி: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்துார், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

அக்., 19ம் தேதி: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.,20ம் தேதி: டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அக்.,21ம் தேதி: டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென்மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories