சாலை மேம்பாட்டுக்கு ரூ.460 கோடி ஒதுக்கீடு: ஓபிஎஸ்

சற்றுமுன் சென்னை தமிழகம்
pannerselvam budget - 2026

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 – 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான – ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்…

தமிழகத்தில் 1986 கி.மீ தொலைவில் சாலைகள் மேம்படுத்தப்படும்

உலக வங்கி நிதி உதவியுடன், 2வது கட்ட திட்டப் பணிகள் 1171 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது

தமிழக சாலை மேம்பாடு 459.74 கோடி ஒதுக்கீடு

சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது

சென்னை சுற்றுவட்ட சாலைக்கு, கடன் உதவி பெற ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை

இந்த திட்டம் சென்னை சுற்றுவட்ட சாலை தரத்தை மேம்படுத்தும்

2019-20ம் ஆண்டில் 206 ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும்

நபார்ட் வங்கி உதவியின் கீழ் 299.60 கோடி செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ. 13,605.19 கோடி ஒதுக்கீடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.