எய்ம்ஸ்ஸுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் நன்றி!

சற்றுமுன் சென்னை தமிழகம்



pannerselvam budget - 2026

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 – 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான – ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்…

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி என்று தெரிவித்தார் ஓ.பன்னீர் செல்வம்

அம்மா மகப்பேறு பரிசு பெட்டகம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப் படும் என்று கூறிய ஓபிஎஸ்., அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள், ஏழை, எளிய நலிவடைந்தோருக்கு கிடைக்க உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

உலக வங்கி கடன் உதவியுடன் 2685.19 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று கூறினார் ஓபிஎஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.