அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடக்கம்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
pannerselvam budget - 2026

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 – 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான – ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்…

தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் 745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு

37 அணைகளில் கட்டமைப்பை புனரமைக்கும் பணிகளை 2வது கட்டமாக மேம்படுத்தப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு

திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 132.8 கோடி செலவில் செயல்படுத்த முடிவு v 2019-20 பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.5983.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.. என்று குறிப்பிட்டார் ஓபிஎஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.