ராமலிங்கம் கொலையாளிகளின் கார் சிக்கியது!

Published:

ramalingam murder - 2026

திருபுவனத்தில் பாமக., பிரமுகர் ராமலிங்கத்தைக் கொன்ற கொலையாளிகளின் கார் சிக்கியுள்ளது.

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் ராமலிங்கத்தை கொலை செய்தவர்களின் கார் சிக்கியுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ராமலிங்கத்தைக் கொன்றவர்கள் 4 பேர், உடனே காரில் தப்பித்துள்ளனர்.

ராமலிங்கம் தனது டாடா ஏஸ் வாகனத்தில் சென்றபோது, வழி மறித்து அவரை வெட்டியவர்கள், பின்னர் காரில் ஏறித் தப்பினர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தங்கள் வீடுகளில் தங்க வைத்திருந்தவர்கள், பிரச்னைக்குக் காரணமானவர்கள் என 5 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தப்பிய கொலையாளிகள் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. மேலும், ராமலிங்கத்தை கொலை செய்தவர்கள் பயன்படுத்திய ஸ்விப்ட் கார் திருச்சியில் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img