எப்படி மோடியை இன்னும் விமர்சிக்கலாம்னு ஆலோசனை நடத்துறாரோ… தம்பிதுரை?

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
thambidurai - 2026

தமிழகத்தில் திமுக.,வுக்குப் போட்டியாக மோடியையும், பாஜக.,வையும் விமர்சிப்பதில் நம்பர் ஒன் இடத்தை வகிக்கிறார் அதிமுக.,வின் தம்பிதுரை.

தேசியக் கட்சிகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம் என்று திராவிடக் கொள்கையை பறைசாற்றி வந்த மு.தம்பிதுரை, கடந்த முறை மோடி மதுரை வந்த போதே மிகவும் நெருங்கிப் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் மீண்டும் அவர் தனது கருத்துகளை அதே போல் பேசி வந்தார்.

இதனிடையே, தம்பிதுரையின் மோடி விமர்சனப் பேச்சுகள் குறித்து செய்தியாளர்கள் ஓபிஎஸ்ஸிடம் கேட்டனர். அதற்கு அவர், தாம் கூறும் கருத்துகள் குறித்து தம்பிதுரை அவ்வப்போது விளக்கம் கொடுத்து விடுவதாக கூறினார்.

இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்படியெனில், அதிமுக., தலைவர்களுக்குத் தெரிந்தும் ஆலோசனையின் பேரிலும்தான் தம்பிதுரை இவ்வாறு விமர்சனப் பேச்சுகளை அவிழ்த்து விடுகிறார் என்று கூறினர் பாஜக.,வினர்.

இந்நிலையில், இன்று கோவை, திருப்பூர் வந்த பாரதப் பிரதமர் மோடியை வரவேற்ற குழுவில் தம்பிதுரையும் இருந்தார். பின்னர் கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் தம்பிதுரை எம்.பி. சந்தித்துப் பேசினார்.

கோவை விமான நிலையத்தில் 3 மணி நேரமாக தம்பிதுரையும், பொன். ராதாகிருஷ்ணனும் பேசி வருயதாகத் தகவல் வெளியானது. இதனால் அதிமுக., பாஜக., இடையே உடன்பாடு எட்டப்படும் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.